Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இளநிலை பட்டப்படிப்புகளில் மட்டும் 94,489 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல் முதுநிலை பட்டப்படிப்புகளில் 8,160 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்களில் இதுவரை 73 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. முதுநிலை படிப்பைப் பொறுத்தவரை 33.4 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை படிப்பிற்கான ஆர்வம் மாணவர்களிடையே அதிகமாக இருக்கும் நிலையில், முதுநிலை சேர்க்கைக்கான கால அவகாசம் இன்னும் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கப்படுவதும், வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b