Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி, சந்திரபாபு நாயுடு தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அசைக்க முடியாத உறுதியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.
முழுமையான உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிர்மலா சீதாராமனின் பங்களிப்பை பாராட்டும் வகையில் சந்திரபாபு நாயுடு இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல், தொழில் துறை பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA