சென்னையில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னையில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி பேரியக்கம் 2026 பயிற்சி முகாமில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். பாஜக தேசிய அலுவலக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தரு
Nai


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னையில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி பேரியக்கம் 2026 பயிற்சி முகாமில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார்.

பாஜக தேசிய அலுவலக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் இணைந்து நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

கட்சியின் கொள்கைகள், அமைப்பு வலிமை, களப்பணி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் வகையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதன் மூலம் பாஜக தொண்டர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சி முகாமில் பாஜக இளைஞரணி தேசிய துணைத் தலைவர் அபினவ் பிரகாஷ், தெலங்கானா மாநில துணைத் தலைவர் காசம் வெங்கடேஸ்வருலு, எஸ்.பி.எம்.ஆர்.எஃப். இயக்குநர் விநய் சிங், நாடாளுமன்ற அலுவலகச் செயலாளர் சிவசக்தி, டெல்லி செய்தித் தொடர்பாளர் ராஜ்குமார் ஃபுல்வாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக பாஜக மாநில, மாவட்ட மற்றும் மண்டல் அளவிலான நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ