Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
வடசென்னை திருவொற்றூர் அரசு ஜெயக்குமார் கரோடியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கடந்த 14-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் 11 சிறார்கள் மற்றும் தியாகராஜன் என்ற கல்லூரி மாணவர் என 12 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த மேலும் 3 சிறுவர்களை திருவொற்றியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் சில சிறார்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 சிறுவர்களை அடையாளம் கண்டு தற்போது கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த வழக்கில் 14 சிறார்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில சிறார்களை திருவொற்றியூர் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P