காங்கோவில் எபோலா கோர தாண்டவம் - பலி எண்ணிக்கை 2325 ஆக உயர்வு
காங்கோ, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2325 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள
காங்கோவில் எபோலா கோர தாண்டவம் - பலி எண்ணிக்கை 2325 ஆக உயர்வு


காங்கோ, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2325 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, காங்கோவில் இதுவரை 4945 பேர் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உயிரிழப்பு 2325 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

எபோலா என்பது மிகவும் ஆபத்தான தொற்று நோயாகும். காய்ச்சல், உடல் வலி, வாந்தி மற்றும் ரத்தக்கசிவு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். காங்கோவின் சில பகுதிகளில் சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லாததால் நோய் கட்டுப்பாடு சவாலாக உள்ளது.

இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவர உலக சுகாதார அமைப்பு மற்றும் காங்கோ அரசு இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b