ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு – வினாடிக்கு 12,000 கன அடியாக சரிவு
தர்மபுரி, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 14,000 கன அடி நீர் வ
ஒகேனக்கல்


தர்மபுரி, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 14,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், காவிரி ஆற்றில் கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அருவிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் தொடர்ந்து நீரின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும் அல்லது குறையும் நிலவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் குறையுமா அல்லது மீண்டும் அதிகரிக்குமா என்பது அடுத்தடுத்த மணி நேரங்களில் தெரியவரும்.

நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலா பகுதிகளில் நிலவும் சூழ்நிலையையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து நிலவரத்திற்கு ஏற்ப சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam