Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு நேற்றைய நிலையில் இருந்து மேலும் உயர்ந்துள்ளது.
நேற்று வினாடிக்கு 12,174 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 82.13 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 82.70 அடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் அணையின் மொத்த நீர் இருப்பு 44.70 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b