Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.23 கோடியே 67 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.
இதில், ஒரே நேரத்தில் 125 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக் கூடமும், தலா 25 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் 24 விருந்து மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் பூஜைப் பொருட்களை எளிதாக வாங்கும் வகையில் 235 விற்பனை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ.23.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணிகள், இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ