Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கண்ணியம் தவறிப் பேசுவதும், வெறுக்கத்தக்க உடல்மொழியை வெளிப்படுத்துவதும் அவையடக்கமின்மையை காட்டுவதுடன், முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் அவையை அமளிக்குள்ளாக்கும் முயற்சியாகவும் உள்ளது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் பேசியதாகவும், அமைச்சர் ரமேஷ் அர்த்தமற்ற கருத்துகளை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் பேச்சுகளை அவைத்தலைவர் கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் அமளிதுமளியில் முடிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை நடவடிக்கைகளில், அவைத்தலைவரே ஆளுங்கட்சியினரை காப்பாற்றி வருவதாகவும் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், தங்களைச் சீரமைத்துக் கொள்ளாமல் இன்னும் எவ்வளவு காலம் அவைத்தலைவரின் நிழலில் காலம் ஓட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ