Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடமுழுக்கு விழாவை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து சீரமைப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam