நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன விழா -  பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை மானியம்
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச) நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி நாளன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத
Dhamma


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச)

நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி நாளன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன விழாவில் பங்கேற்று பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 15.11.2026க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை –600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Hindusthan Samachar / P YUVARAJ