நீட் எதிர்ப்பு மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு - காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டுக்கு (EWS) எதிராக திருநெல்வேலியில் மாநாடு நடத்த அனுமதி கோரி திராவிடர் கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர
High court


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டுக்கு (EWS) எதிராக திருநெல்வேலியில் மாநாடு நடத்த அனுமதி கோரி திராவிடர் கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவும், அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் மாநாடு நடத்தவும் அனுமதி கோரி திராவிடர் கழகம் சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மாநாடு நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல்துறை நிராகரித்ததாக மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், கோவையில் நடைபெற்ற பாஜக பேரணி தொடர்பான விவகாரத்திலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி வி. லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

அதற்குள் காவல்துறை தரப்பில் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ