கர்நாடக விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் சிறப்புய் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச
Edappadi Palaniswami


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் சிறப்புய் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

15.08.2026 அன்று தமிழக விவசாயிகள் தங்களுடைய கால்நடைகள் காணாமல் போனதையடுத்து வனத்துறை பகுதியில் தேடிக்கொண்டிருந்த போது கர்நாடக வனத்துறையினர் மூன்று பேரை சுட்டு கொலை செய்யதுள்ளனர்.

ஒரு நபர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மான் வேட்டையாடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கர்நாடக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் கொல்லப்பட்டது ஒரு துயரமான சம்பவம், இந்த துப்பாக்கி சூட்டில் மிகப்பெரிய சதி நடைபெற்றுள்ளது.

வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கையை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடகா அரசு அறிவித்துள்ள நிதி ரூ.5 லட்சம் மிக குறைவு. தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும்.

இதுபோன்ற சம்பவம் இனி தொடராத வகையில், கர்நாடகா அரசுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN