Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டாவது 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை நடத்த உள்ளனர்.
இப்போட்டியின் இரண்டாவது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி ஜென்னி கிளப்பில் நடைபெற்றது. இதனை ஈக்வெஸ்ட்ரியன் லீக் ஆலோசகரும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட குதிரையேற்ற சங்கத் தலைவர் மற்றும் வழிகாட்டுநர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிமுகபடுத்தினார். ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை புல்ஸ் அணியைச் சேர்ந்த பாரத் மனோகரன், பெங்களூரு நைட்ஸ் அணியைச் சேர்ந்த திலீப், கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணியைச் சேர்ந்த நவீன், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் அணியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டி, வெள்ளானைப்பட்டி-யை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 'பிசைட் தி பவர் ஹவுஸ்' எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது.
இது குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஏ.எஸ். சக்தி பாலாஜி,
ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், முன்னணி குதிரையேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை ஷோ ஜம்பிங் போட்டியில் வெளிப்படுத்துவதற்கான தொழில்முறை தளத்தை உருவாக்குவதுடன், இந்தியாவில் குதிரையேற்ற விளையாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இரண்டாவது சீசனில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை புல்ஸ், கேரளாவைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்போர்ட்ஸ், தெலங்கானாவைச் சேர்ந்த கோல்கொண்டா சார்ஜர்ஸ், கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்களூரு நைட்ஸ், கோவாவைச் சேர்ந்த குவாண்டம் ரெயின்ஸ் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன என்றார்.
இந்த லீக்கில் பாரத் மனோகரன், சூர்யா, பாலமுருகன், ஸ்ரேஷ்த், iபாலாஜி விஜயசங்கர், ஹாஷினி, அவிக் பாட்டியா, நீல் கெண்டல், கிரண், ஹர்சித் மற்றும் ஆராதனா உள்ளிட்ட முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA