Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது பட்ஜெட்டும் இரண்டாம் நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. மேலும் 4 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
அப்போது திமுக, அதிமுக சார்பில் கோவை மாணவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூறியதும் எதிர்க்கட்சிகளால் கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து முதலில் பேசிய திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்,
“தமிழர்கள் எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அதற்கு முதலில் குரல் கொடுப்பவர் திமுக தலைவர் தான்.
எந்த ஒரு தவறும் செய்யாத விவசாயிகளை கர்நாடக அரசு சுட்டுக் கொன்றது கண்டிக்கத்தக்கது. இத்னை Fake என்கவுண்டர் கூட என்று சொல்லலாம்.
மனித உரிமை மீறப்பட்டுள்ளது, வனத்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும், இதனை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறை காவல்துறை மீது, Fack என்கவுண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்.
கர்நாடக அரசு இதற்கு கொடுக்கக்கூடிய தகவல்களை நம்பக்கூடாது முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN