Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் நலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள், திரைப்பட பின்னணி பாடகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த திரைப்பட இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையாருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார், அதனைத் தொடர்ந்து கோவிலில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் கோவில் கொடிமரம் முன்பு தரிசனம் செய்தவர், ஸ்பெயின் நாட்டினருடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்கு வந்திருந்த இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
அடுத்த படத்தின் அப்டேட் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓம் நமசிவாய என பதிலளித்துவிட்டு அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்றார்.
Hindusthan Samachar / ANANDHAN