Enter your Email Address to subscribe to our newsletters

துபாய் , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு தர்விஷ் ரசூலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது நபியின் மகன் ஹசன் ஈசகில் முதல்முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதேநேரத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் வழக்கமான கேப்டனும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரஷித் கான் இந்த அணியில் இடம்பெறவில்லை.
மேலும், அணியின் சில முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்கும் வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த அணியை தேர்வு செய்துள்ளது.
இதனால் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெறுகின்றன.
இதில் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA