மனுக்கள் மீதான விசாரணை குறித்து புகார் தெரிவிக்க ஆவடி காவல் ஆணையரகம் புதிய தொலைபேசி எண் அறிமுகம்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தவோ, வழக்குப்பதிவு செய்யவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ எவ்வித கையூட்டும் வழங்கத் தேவையில்லை என ஆவடி காவல் ஆணையரக
Aavadi


Bb


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தவோ, வழக்குப்பதிவு செய்யவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ எவ்வித கையூட்டும் வழங்கத் தேவையில்லை என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

மேலும், காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகளுக்காக லஞ்சம் பெறுதல், மனுதாரர்களிடம் மரியாதைக்குறைவாக பேசுதல் அல்லது நடத்துதல் உள்ளிட்ட முறையற்ற செயல்பாடுகள் தொடர்பாக புகார்கள் இருந்தால், 98400 18110 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிக்கும் நபர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் காவல் நிலையங்களில் தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ