திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.6.12 கோடி கிடைக்கப்பெற்றது!
திருமலை , 19 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், 80 ஆயிரத்து 905 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 539 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்
A


திருமலை , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 80 ஆயிரத்து 905 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 539 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று கோவில் உண்டியலில் ரூ.6 கோடியே 12 லட்சம் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்காக 4 லட்சத்து 16 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 546 பக்தர்கள் மருத்துவச் சேவை பெற்றனர்.

இதற்கிடையே, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டனர்.

இதனால், பக்தர்கள் காத்திருக்கும் வரிசை வெளியே சிலாத்தோரணம் வரை நீண்டது.

டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA