Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் வர்ல ராமையா, அமைச்சர் நாரா லோகேஷை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
எம்.எல்.சி.யாக பதவியேற்ற பிறகு சட்டமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சர் லோகேஷின் அறைக்குச் சென்ற வர்ல ராமையா, தனக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இருவரும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
வலுவாக குரல் கொடுக்க வேண்டும்
அப்போது வர்ல ராமையாவிடம் அமைச்சர் லோகேஷ் கூறியதாவது:-
சட்டமன்ற மேலவையில் கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை வலுவாக எடுத்துரைக்க வேண்டும். அதேபோல், பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து மேலவையில் வலுவாக குரல் கொடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
வர்ல ராமையா போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் சேவை சட்டமன்ற மேலவைக்கு மிகவும் அவசியமாகும்.
அவருடைய அரசியல் அனுபவம் கூட்டணி அரசுக்கும், மேலவை செயல்பாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் நாரா லோகேஷ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA