Enter your Email Address to subscribe to our newsletters

தாடேப்பள்ளி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரபிரதேச சட்ட மேலவை துணைத் தலைவர் பதவிக்கு வைகாபா சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான தூமாட்டி மாதவராவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தூமாட்டி மாதவராவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தாடேப்பள்ளியில் உள்ள வைகாபா மத்திய அலுவலகத்துக்கு சென்ற அவர், கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார்.
அப்போது ஜெகனிடம் அவர் ஆசி பெற்றார்.
மாதவராவை வாழ்த்திய ஜெகன், அவரது தேர்தல் ஒருமனதாக நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மேலும், சட்ட மேலவையில் உள்ள கட்சி எம்எல்சிக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாதவராவின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வெற்றி உறுதி?ஆந்திர சட்ட மேலவையில் வைகாபாவுக்கு தற்போது பெரும்பான்மை உள்ளது.
இதனால், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தூமாட்டி மாதவராவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது தேர்தல் போட்டியின்றி நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA