Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை 2-வது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை ராஜமங்கலத்தில் பெண் ஆடிட்டர் ஒருவரின் வீடு, எர்ணாவூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை போரூர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவு 10.30 மணியளவில் நிறைவடைந்தது.
மேலும், தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெருங்குடியில் 4 இடங்களிலும், அண்ணா நகரில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
Hindusthan Samachar / P YUVARAJ