Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை பேரூர் பகுதியில் சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒரே கட்டமாக நடத்தப்படும் நீட் தேர்வு முறையில் பரிசீலனை தேவை.
34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது கல்வி முறையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மாணவர்களுக்கு திறன் சார்ந்த மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வழங்கப்படுவது அவசியம்.
கல்வி பயிலும் மாணவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்காமல், தொழில்முனைவோராக உருவாகி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிலைக்கு வர வேண்டும். இதற்கேற்ப கல்விக் கொள்கையில் தொடர்ச்சியான மாற்றங்கள் தேவை என்றார்.
உயர்கல்வியில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர்,
தாய்மொழி கற்றல் அவசியமானது என்றாலும், ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியையும் மாணவர்கள் கற்றுக்கொள்வது அவசியம்.
இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN