Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர் சிந்தியா செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கல்லூரி மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையிலேயே சுற்றறிக்கை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
தற்போது அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட தகவல் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் இணை இயக்குனர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சிந்தியா செல்வி கூறினார்.
மாணவர்களிடையே ஒழுங்கும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதற்காக மட்டுமே சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், இதில் எந்தவித தனிப்பட்ட காரணமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam