முல்லைப் பெரியாறு - வைகை அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தேனி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் தொடக்கத்தில் பெய்த பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தற்போத
Current water level status of Mullaperiyar and Vaigai dams


தேனி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் தொடக்கத்தில் பெய்த பலத்த மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தற்போது மழை தணிந்தாலும், நீர்மட்டம் 122 அடிக்கும் மேல் நிலையாக நீடிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரின் கணிசமான பகுதி வைகை அணைக்குத் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 578 கன அடி வீதம் நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போதைய நீர் இருப்பு 3163 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதேபோல், வைகை அணையை பொறுத்தவரை, அணையின் நீர்மட்டம் 35.99 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 192 கன அடி நீர்வரத்து உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 71 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணையில் தற்போது 666 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஓரளவு நம்பிக்கையை அளித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b