Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இன்றைய நிகழ்ச்சி நிரலின்படி, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்துகின்றனர்.
அணைகள் பராமரிப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமப்புற குடிநீர் விநியோகம், ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்றே நடைபெறுகிறது.
தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல், கலைஞர்களுக்கான நலத் திட்டங்கள் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் தொடர்பான விவாதங்கள் அவையில் எதிரொலிக்கின்றன.
விவாதங்களின் முடிவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் தங்கள் துறை சார்பில் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b