Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தான் அமைதியாக இருப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன்,
அடுத்த முறை நாங்கள் ஆட்சிக்கு வரும் வரை அதே மாதிரி அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என பதிலளித்தார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, தவெக ஆட்சியின் 100 நாட்கள் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு துரைமுருகன்,
செயல்பாடுகள் இருந்தால் தானே பார்ப்பதற்கு என விமர்சனமாக பதிலளித்தார்.
அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சியை விமர்சித்ததுடன், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பை மட்டும் துரைமுருகன் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam