காவிரியில் நீர்வரத்து குறைவு - பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 12,000 கன அடியாக நீட்டிப்பு
தருமபுரி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 12,000 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கிரு
காவிரியில் நீர்வரத்து குறைவு -  பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 12,000 கன அடியாக நீட்டிப்பு


தருமபுரி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 12,000 கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கர்நாடக அணைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததாலும், அணைகளின் நீர்மட்டத்தை சீராக பராமரிக்கும் நோக்கிலும் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரின் வேகம் இன்னும் சீற்றமாகவே உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பரிசல் இயக்கத்திற்கு இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரிசல் இயக்க தடையால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து மேலும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே பரிசல் இயக்க அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b