கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
பெரம்பலூர், 19 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக மாநில வனத்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொ
Lawyers in Perambalur stage


பெரம்பலூர், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக மாநில வனத்துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மூன்று பேரும் தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ்

(அந்தோணி சாமி), ஜான் (ஜான் ரோஸ் பீட்டர்) மற்றும் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உட்பட வேப்பந்தட்டை, குன்னம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b