மருத்துவக் கனவை நனவாக்கிய 7.5% உள்ஒதுக்கீடு - 614 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள்
தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீட்டின் கீழ், 2026–27 கல்வியாண்டில் 614 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்து
நீட்


தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீட்டின் கீழ், 2026–27 கல்வியாண்டில் 614 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 510 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், 104 மாணவர்களுக்கு பிடிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.

எம்பிபிஎஸ் இடம் பெற்ற 510 மாணவர்களில், 323 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் இஎஸ்ஐ நிறுவனங்களிலும், 166 பேர் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும், 9 பேர் தனியார் பல்கலைக்கழகங்களிலும் சேர உள்ளனர்.

பிரிவு வாரியாக, எம்பிசி/டிஎன்சி பிரிவில் அதிகபட்சமாக 205 மாணவர்களும், பிசி பிரிவில் 170, எஸ்சி பிரிவில் 88, பிசிஎம் பிரிவில் 24, எஸ்சிஏ பிரிவில் 15, எஸ்டி பிரிவில் 6, பொதுப்பிரிவில் 2 மாணவர்களும் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுள்ளனர்.

பிடிஎஸ் படிப்பில் தேர்வான 104 மாணவர்களில் 16 பேர் அரசு கல்லூரிகளிலும், 88 பேர் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர உள்ளனர். இவர்களில் எம்பிசி/டிஎன்சி பிரிவில் 53, பிசி பிரிவில் 27, எஸ்சி பிரிவில் 15, எஸ்சிஏ மற்றும் பிசிஎம் பிரிவுகளில் தலா 4, எஸ்டி பிரிவில் ஒரு மாணவர் இடம் பெற்றுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P