எம்எல்ஏக்களின் மக்கள் பணி சிறக்க அரசு சார்பில் புதிய சலுகைகள் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்கள் பணியை எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து ஆற்றுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் பல்வேறு புதிய சலுகைகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெள
எம்எல்ஏக்களின் மக்கள் பணி சிறக்க அரசு சார்பில் புதிய சலுகைகள் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்கள் பணியை எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து ஆற்றுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் பல்வேறு புதிய சலுகைகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் தலா ஒரு வாகனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்குள் தங்கு தடையின்றி பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இந்த வாகன வசதி பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவினங்களுக்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகப் பணிகளை சீராக கவனிப்பதற்காக அரசு சார்பில் தலா ஒரு உதவியாளரை நியமித்து வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதல் அலுவலகப் பணியாளர்களை நியமித்துக் கொள்வதற்காக மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் படியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b