மத்திய அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு - சென்னையில் இன்று காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரகப் போராட்டம்
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அ
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு - சென்னையில் இன்று காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டம்


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை சென்னையில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணியளவில் இந்த போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

மேலும், மத்திய அரசு மேற்கொள்ள உள்ள நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கை தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான இந்த மறுவரையறை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும்

அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b