Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சாரமேடு பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, மதரஸாக்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக உள்ள தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.மேலும், உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள படகு இல்லத்தை குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும்.
உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் செல்லும் சாலையில் பாலம் இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். கரும்புக்கடை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு போதிய வசதி இல்லாததால், உடனடியாக குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் .
ஒரு லிட்டர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனவலித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாநகராட்சி ஆணையாளரின் கவனத்தை இருக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA