Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் அமைந்துள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 50-வது ஆண்டு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், மத்திய அரசு வழக்கறிஞர் ராகேஷ், 101 வயதான மூத்த அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன், ஏழை, எளிய மக்களுக்கு வெறும் 2 ரூபாயில் மருத்துவம் பார்த்து பல ஆண்டுகளாக சேவையாற்றிய மருத்துவர் பத்மஸ்ரீ ஹண்டே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தகுதியான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், சமூக நலனுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள்,
தமிழ்நாடு சோசியல் வெல்ஃபேர் அசோசியேசன் நிறுவனத் தலைவர் புரட்சிவேந்தன் சுந்தரமூர்த்தி,
கடந்த 50 ஆண்டுகளாக சமூக நலனில் தொடர்ந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக பாராட்டினர்.
மேலும்,பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர்களையும், விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை பெற்றவர்களையும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
Hindusthan Samachar / Durai.J