வந்தே மாதரம் என்றாலே அன்றும், இன்றும் பயம் - காங்கிரசை சாடிய பா.ஜ.க மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்
ஐதராபாத் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.) வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:- வந்தே மாதரம்” என்றாலே ஒரு காலத
A


ஐதராபாத் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:-

வந்தே மாதரம்” என்றாலே ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் அதேபோன்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், இன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

சுதந்திர தின விழாக்களில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை தடுப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் மேலிட தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் நிலைப்பாட்டை பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களிடையே தேசப்பற்றையும் எழுச்சியையும் ஏற்படுத்திய பாடல் வந்தே மாதரம்.

அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க பாடலை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.

நாட்டில் காங்கிரஸ் மற்றும் மஜ்லிஸ் கட்சிகள் மட்டுமே வந்தே மாதரம் பாடலை எதிர்க்கின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு பண்டி சஞ்சய் குமார் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA