முன்னாள் அமைச்சர் பி.ஆர்.எஸ் கட்சி மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் வீட்டுக் காவலில் வைப்பு
ஹைதராபாத் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சித்திப்பேட்டை தொகுதி பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ், ஹைதராபாத் கோகாபேட்டில் உள்ள அவரது இல்லத்தில் போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சனத் நகரில் உள்ள TIMS மருத்துவம
A


ஹைதராபாத் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சித்திப்பேட்டை தொகுதி பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ், ஹைதராபாத் கோகாபேட்டில் உள்ள அவரது இல்லத்தில் போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

சனத் நகரில் உள்ள TIMS மருத்துவமனையை பார்வையிட ஹரீஷ் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டுக் காவலில் வைத்தனர்.

இதையொட்டி அதிகாலை முதலே கோகாபேட்டில் உள்ள ஹரீஷ் ராவின் இல்லம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர் வெளியே செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

ஹரீஷ் ராவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தகவல் பிஆர்எஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் கோகாபேட் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. ஹரீஷ் ராவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA