Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பழமையான வெண்கல திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழக காவல்துறை மீட்டுள்ளது.
சிலைத் திருட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சிலையின் உண்மையான பூர்வீகத்தை நிரூபிக்கும் வகையில் தேவையான அறிவியல் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. சிலை சட்டவிரோதமாக கோயிலில் இருந்து அகற்றப்பட்டதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, சிலையை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க பல்கலைக்கழகம் உறுதியளித்தது.
தமிழக காவல்துறையின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு, இந்திய தொல்லியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம், கடந்த 16.08.2026 அன்று திருமங்கை ஆழ்வார் சிலை மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலையை தமிழக காவல்துறை மீட்டு மீண்டும் தாயகம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ