போதையில் கார் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம்
சிட்னி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (39), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், பிக்பாஷ், பாகிஸ்தான் பிரிமீயர் லீக் உள்ளிட்ட பல்வேறு டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருக
A


சிட்னி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (39), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், பிக்பாஷ், பாகிஸ்தான் பிரிமீயர் லீக் உள்ளிட்ட பல்வேறு டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் மது அருந்திவிட்டு காரை ஓட்டியபோது, போக்குவரத்து போலீசாரின் சோதனையில் வார்னர் சிக்கினார்.

அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு சிட்னி உள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வார்னர் போதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, வார்னருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர் தொடர்ந்து கார் ஓட்ட விரும்பினால், வாகனத்தில் ‘இன்டர்லாக்’ கருவியை பொருத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால், காரை இயக்க முடியாத வகையில் இந்த கருவி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA