Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
போதைப்பொருள் மற்றும் செயற்கை போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மாநிலம் முழுவதும் 65 இடங்களில் ஆன்டி-நார்கோடிக் டாஸ்க் ஃபோர்ஸ் எனப்படும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சென்னை மணலி பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது லாரிக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உதயவாணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சாவும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b