Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 02 ஆகஸ்ட் (ஹி.ச)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் துரைப்பாண்டி - சுவாதி தம்பதியின் மூன்று வயது பெண் குழந்தையை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷ்ணுபிரியா, விக்னேஸ்வரன் என்ற பட்டாசு தொழிலாளியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
விக்னேஸ்வரன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல் சம்பவத்தன்றும் மது போதையில் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், விஷ்ணுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். குழந்தையின் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கியதில், குழந்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாசு தொழிலாளியான விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b