ஆந்திராவுக்கு ரூ.4,597 கோடி கூடுதல் வரிப்பங்கு - மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு நன்றி
அமராவதி , 02 ஆகஸ்ட் (ஹி.ச) ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.4,597 கோடி கூடுதல் வரிப்பங்கு நிதியை விடுவித்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத
A


அமராவதி , 02 ஆகஸ்ட் (ஹி.ச)

ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.4,597 கோடி கூடுதல் வரிப்பங்கு நிதியை விடுவித்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரிப்பங்கு நிதி வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி விடுவிக்கப்படும்.

ஆனால், இந்த முறை அதற்கு முன்பாகவே ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதள x பதிவில்,

மத்திய அரசு வழங்கியுள்ள இந்த கூடுதல் வரிப்பங்கு நிதி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை மேலும் வேகப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவு மாநில வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூடுதல் நிதி மூலம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மேலும் வலு கிடைக்கும் என ஆந்திர அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA