Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 02 ஆகஸ்ட் (ஹி.ச)
புதுச்சேரியில் சித்தா, ஹோமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்) பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளநிலை ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா மற்றும் யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பாக புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எஸ்.எம்.எஸ் (சித்தா), பி.எச்.எம்.எஸ் (ஹோமியோபதி) மற்றும் பி.என்.ஒய்.எஸ் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதியும், விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதை கருத்தில் கொண்டும் இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த படிப்புகளுக்கு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b