Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b