Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில்,
கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று கூறி முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காவிரி உரிமை விவகாரத்தில் கர்நாடக பாஜக தலைவர்களை எதிர்க்கத் தயாரா என்றும், தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமையைப் பெற பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசிடம் இதுவரை வலியுறுத்தியுள்ளீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, டெல்லியில் மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டில் வந்து காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பாஜகவின் இரட்டை வேட அரசியல் என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இந்த இரட்டை நிலைப்பாட்டை தமிழ்நாட்டு விவசாயிகள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P