மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத போக்கை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரையில் இருந்து சென்னை வந்த அமைச்சர் நிர்மல்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய்க்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி அளிக்கவே , முதல்வர் விஜய் தனி
CTR Nirmal Kumar


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரையில் இருந்து சென்னை வந்த அமைச்சர் நிர்மல்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

முதல்வர் விஜய்க்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி அளிக்கவே , முதல்வர் விஜய் தனிமைபட்டிருபதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், கர்நாடக முதல்வர் சிவகுமார் குடும்பதுக்கும் ஸ்டாலின் குடும்பதுக்கும் கட்சியை தாண்டி நெருங்கிய உறவு இருப்பதாகவும், காங்கிரஸ் தலைமை சொல்வதைவிட திமுக சொல்வதைதான் அவர்கள் செய்வார்கள் என்றும் கூறிய அவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் காவிரி நீரை வரவிடாமல் கலைஞர் தடுத்ததைபோல் இப்போது தவெக விற்கு நற்பெயர் வரகூடாது என்பதற்காக ஸ்டாலின் தடுத்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்,

மேலும் இதேபோல் அதிமுக வும் கர்நாடகா மற்றும் பாஜக விற்கு ஆதரவாக செயல்படகூடிய நெருக்கடியான சூழலில் நாளை உச்சநிதிமன்றத்தில் முதல்வர் ஆனைகிணங்க வழக்கு தொடர உள்ளதாகவும்,

திமுக இது போன்ற ம்க்கள் விரோத போக்கை கைவிட்டு தரம் தாழ்ந்த செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் தற்போது கர்நாடகத்தில் இருந்து வழங்கபட்டுள்ள 3500 கன அடி நீர் இலாமல் காவிரி ஆணையம் உத்தரவுபடி மேலும் 17 டி.எம்.சி தண்ணிர் வழங்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் இது போல் நிகழ்வதால் நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வாக வலுவான வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் தமிழகதுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகைவகையிலும் டி.கே.சிவகுமாருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் தொடர்ச்சியாக முடுகட்டை போட்டு வரும் திமுக வின் மக்கள் விரோத செயலை வண்மையாக கண்டிப்பதாகவும், தெரிவித்தார்.

காவிரி தொடர்பாக தமிழகத்திற்கு தண்ணிர் தர கூடாது என்ற ஒரே நிலைபாட்டில் கர்நாடகம் இருபதாகவும் ஆனால் அதை எந்த வகையில் எதிர்கொள்வது என்ற விதத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் பல்வேறு நிலைபாடுகள் உள்ளது என்றும், அனைத்து கட்ச்சியினரையும் வைத்து சட்டசபையில் தீர்மானம் நிரைவேற்றியபோது அமைதியாக இருந்த அதிமுக மற்றும் திமுக மறுநாளே தீர்மாணத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்த அவர் , இப்படி பல்வேறு நிலைபாடுகள் உள்ள நிலையில் எப்படி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது என்றார்.

மேலும் தவெக சட்டமன்ற உறுபினர்களை திமுக விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் பெங்களுருவில் இருந்து பன பறிவர்தனை நடந்துள்ளதாகவும், இது திமுக சிவகுமார் இடையேயான உறவு எந்தளவு உள்ளது என்பதை வலுபடுத்தும் விதமாக இருபதாகவும் தெரிவித்த அவர், காங்கிரஸ் மேலிடம் சொல்வதை கூட கேட்க தயராக இல்லாமல் திமுக சொல்வதை மட்டுமே கேட்கும் நிலையில் சிவகுமார் இருபதால் காங்கிரஸ் மேலிடத்தில் இது குறித்து பேச முடியவில்லை என்றார்.

மேலும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கபட்டதாகவும், ஆனால் அதிக மின் கட்டணம் என குழப்பம் எற்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்த அவர் , அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் கட்டணம் மட்டும் சில இடங்களில் வனிக மின் கட்டணமாக கணக்கெடுக்கபட்டுள்ளதால் அதை விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN