பெண்களின் ஆடைகள் திருட்டு - மொட்டை மாடியில் குவியலாகக் கிடந்த விசித்திரம்
கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில், வீட்டின் வெளிப்புறத்தில் துவைத்து உலர வைக்கப்பட்டு இருந்த பெண்களின் இன்னர்வேர்கள், உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாக
Coimbatore


கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில், வீட்டின் வெளிப்புறத்தில் துவைத்து உலர வைக்கப்பட்டு இருந்த பெண்களின் இன்னர்வேர்கள், உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாகி வந்தன.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்களின் ஆடைகள் மட்டும் காணாமல் போனதால், அப்பகுதி பெண்கள் கடும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் இணைந்து பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்த போது, இதுவரை காணாமல் போன பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய குவியலாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இந்தச் சம்பவம் குறித்துச் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மொட்டை மாடியில் கிடந்த ஆடைகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனநிலை பிறழ்ந்த நபர்கள் அல்லது அப்பகுதியில் தங்கி இருப்பவர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டு உள்ளார்களா ? என்ற கோணத்தில், சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கொண்டு சரவணம்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN