Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். விவசாயியான இவருக்கு மனைவி செல்வி மற்றும் மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி முருகையன், தனது வீட்டின் முன்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணி அளவில், கீற்று கொட்டைகையில் திடீரென தீ பற்றி எரிய அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்.
இருப்பினும், எரிந்த கீற்றுக் கொட்டகையில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா
(வயது 15), தீயை அணைக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த காசிவேல், ராஜசேகர், பழனியப்பன், வேம்பையன், கலையரசி, புவனேஷ்வரன், செல்வராஜ், காளியம்மாள், உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த காசிநாதன் மற்றும் வேம்பையன் ஆகிய இருவரும் இன்று உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b