Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச)
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் உள்ள முக்கிய வழக்கு கோப்புகள், பொது பதிவேடுகள் மற்றும் நிர்வாக ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகார் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்றது.
இதை அடுத்து நடைபெற்ற ஆய்வில், கோப்புகள் பராமரிப்பில் குளறுபடி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த குளறுபடிக்கு காரணமான ஊத்துக்குளி காவல் நிலையத்தில் பணியில் இருந்த நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடமையில் அலட்சியம் காட்டியதாக கருதி அந்த நான்கு காவலர்களையும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிரிஷ்டி சிங் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் ஆவணங்களை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம் என்றும், பணியில் அலட்சியம் காட்டும் காவலர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b