கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு திடீரென உடல்நலக்குறைவு
மும்பை , 02 ஆகஸ்ட் (ஹி.ச.) மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தில், அவரை சந்திப்பதற்காக சிலர் சென்றிருந்தனர். அவர்கள் வீட்டின் வாகன நிறுத்தும் பகுதியில் காத்திருந்தபோது, அபிஜீத் திப்கே அங்கு வந்து அவர்களை சந்தித்தார். அப்போது
A


மும்பை , 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தில், அவரை சந்திப்பதற்காக சிலர் சென்றிருந்தனர். அவர்கள் வீட்டின் வாகன நிறுத்தும் பகுதியில் காத்திருந்தபோது, அபிஜீத் திப்கே அங்கு வந்து அவர்களை சந்தித்தார்.

அப்போது திடீரென அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டின் பின்பகுதிக்கு சென்று வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசாமல், மாடிக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.

இதுகுறித்து அவரது தந்தை பகவான் திப்கே செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அபிஜீத் திப்கேவின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக டாக்டர் வரவழைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தனக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அபிஜீத் திப்கே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA