Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 ஆகஸ்ட் (ஹி.ச)
பொதுமக்களுக்கும் ஆயுதப் படையினருக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட PBG சோல்ஜரத்தான் நிகழ்வை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராஷ்டிரபதி பவனின் முகப்பு பகுதியில் தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில், இந்த முயற்சியின் புரவலரான மிசோரம் ஆளுநர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் கலந்து கொண்டார்.
இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் ஆளுநரும் இந்த முயற்சியின் புரவலருமான ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் முன்னிலையில், ராஷ்டிரபதி பவனின் முகப்பு பகுதியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு PBG சோல்ஜரத்தான் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்காக ஓடுவோம், வீரர்களுடன் ஓடுவோம் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தனித்துவமான தளமாக இந்த சோல்ஜரத்தான் செயல்படுகிறது என்று ராஷ்டிரபதி பவன் விளக்கியுள்ளது.
இந்திய ஆயுதப் படைகளின் உண்மையான ஹீரோக்களுக்கு ஆதரவு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வு, வீரர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் தியாகத்தை கௌரவிக்கிறது, அதேவேளை குடிமக்கள் தங்கள் ஒற்றுமையை தீவிர பங்கேற்பின் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது.
Hindusthan Samachar / vidya.b